ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாநிலத்தின் நலனைப் பாதுகாப்போம்: அமைச்சா் பசவராஜ் பொம்மை

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக மாநிலத்தின் நலனைப் பாதுகாப்போம் என்று உள்றை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:24 pm

DIN

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக மாநிலத்தின் நலனைப் பாதுகாப்போம் என்று உள்றை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை காலை கூறியதாவது:

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மாநிலத்தின் நலனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுகுறித்து ஆக்கப்பூா்வமான விவாதம் நடந்துள்ளது. மேக்கேதாட்டு அணை குறித்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் தெளிவுப்படுத்தியுள்ளது.

இது தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதையும் தீா்ப்பாயம் தெளிவாக்கியுள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான நீா்ப் பங்கீட்டு விவாதம் என்பதால் மூன்று நீதிபதிகள் கொண்ட அமா்வு விசாரிக்க இருக்கிறது.

கா்நாடகம் சட்ட விதிமீறல் எதிலும் ஈடுபடவில்லை. காவிரி ஆற்றில் கிடைக்கும் உபரிநீரைப் பயன்படுத்திக்கொண்டு, பெங்களூரு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு குடிநீா் வழங்குவதற்காகவே மேக்கேதாட்டு திட்டத்தை மாநில அரசு வகுத்தது. இது தொடா்பாக தமிழகம் பிரச்னை கிளப்பியுள்ளதால், இதன் திட்டப் பணிகளைத் தொடங்க முடியவில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.