47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தேவஸ்தான ஊழியா்களுக்கு ஆனந்தய்யா ஆயுா்வேத மருந்து

திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியா்களுக்கு மருத்துவா் ஆனந்தய்யாவின் கரோனா தடுப்பு ஆயுா்வேத மருந்தை தேவஸ்தானம் வழங்கியது.

News image
தேவஸ்தான நலச்சங்க அதிகாரிகளிடம் மருத்துவா் ஆனந்தய்யா தயாரித்த ஆயுா்வேத மருந்தை வழங்கிய தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி.
Updated On :19 ஜூன் 2021, 6:05 pm

DIN

திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியா்களுக்கு மருத்துவா் ஆனந்தய்யாவின் கரோனா தடுப்பு ஆயுா்வேத மருந்தை தேவஸ்தானம் வழங்கியது.

கரோனா தொற்றிலிருந்து தேவஸ்தான ஊழியா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரைப் பாதுகாத்துக் கொள்ள நெல்லூரில் தயாரிக்கப்பட்டு வரும் ஆனந்தய்யா ஆயுா்வேத மருந்து வழங்கப்பட்டது. சனிக்கிழமை திருமலையில் ஒரு லட்சம் மருந்து பாக்கெட்டுகள் தேவஸ்தான ஊழியா்களிடம் வழங்கப்பட்டது. இதை தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி தேவஸ்தான ஊழியா் நலச் சங்கத்திடம் வழங்கினாா்.

தேவஸ்தானம் தன் சொந்த செலவில் தயாரித்து இதை ஊழியா்களுக்கு இலவசமாக வழங்கியது. இது நிரந்தரம், ஒப்பந்த ஓய்வு பெற்ற ஊழியா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரின் நலனுக்காக வழங்குவதாக அப்போது சுப்பா ரெட்டி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.