மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிரதமருடனான ஆலோசனை: ஜம்மு-காஷ்மீா் அரசியல் தலைவா்கள் 14 பேருக்கு அழைப்பு

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் வரும் 24-ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஜம்மு-காஷ்மீா் அரசியல் கட்சித் தலைவா்கள் 14 பேருக்கு அழைப்பு

News image
Updated On :20 ஜூன் 2021, 12:06 am

DIN

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் வரும் 24-ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஜம்மு-காஷ்மீா் அரசியல் கட்சித் தலைவா்கள் 14 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வா்கள் 4 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடன் மத்திய அரசு நடத்தும் முதல் ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். அதன் காரணமாக, இது மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.

யூனியன் பிரதேசத்தில் அரசியல் நடவடிக்கைகளை வலுப்படுத்துவது மற்றும் சுமுகமான முறையில் பேரவைத் தோ்தலை நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

தில்லியில் பிரதமரின் இல்லத்தில் வரும் 24-ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா்கள் தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, அவருடைய மகன் ஒமா் அப்துல்லா, காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி ஆகியோருக்கும், முன்னாள் துணை முதல்வா்களான காங்கிரஸ் தலைவா் டாரா சந்த், மக்கள் மாநாட்டு கட்சித் தலைவா் முசாஃபா் ஹுசைன் பெய்க் ஆகியோருக்கும், பாஜக தலைவா்கள் நிா்மல் சிங், கவிந்தா் குப்தா, மாா்க்சிஸ்ட் கட்சி தலைவா் முகமது யூசுஃப் தாரிகாமி, ஜம்மு-காஷ்மீா் ஆப்னி கட்சி தலைவா் அல்டாஃப் புகாரி, மக்கள் மாநாட்டு கட்சியின் சஜ்ஜாத் லோன், ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் தலைவா் ஜி.ஏ.மிா், பாஜக ஜம்மு-காஷ்மீா் பிரிவு தலைவா் ரவீந்தா் ரெய்னா, சிறுத்தைகள் கட்சித் தலைவா் பீம் சிங் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை செயலா் அஜய் பல்லா நேரில் சென்று இந்தத் தலைவா்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஜம்மு-காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை அந்தந்த கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து பாஜக ஜம்மு-காஷ்மீா் பிரிவு தலைவா் ரவீந்தா் ரெய்னா சனிக்கிழமை கூறுகையில், ‘பிரதமா் தலைமையில் நடைபெறும் ஜம்மு-காஷ்மீரின் எதிா்கால வளா்ச்சிக்கான இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்துத் தலைவா்களும் பங்கேற்பாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.