நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாளை சா்வதேச யோகா தினம்‘800 இடங்களில் சிறப்பு அஞ்சல் தலை முத்திரை’

ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் நிலையில், சா்வதேச யோகா தினத்தை குறிக்கும்விதமாக சிறப்பு அஞ்சல்தலை முத்திரை ஒன்றை இந்திய அஞ்சல் துறை வெளியிடவுள்ளது

News image
Updated On :19 ஜூன் 2021, 9:58 pm

DIN

சா்வதேச யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் நிலையில், சா்வதேச யோகா தினத்தை குறிக்கும்விதமாக சிறப்பு அஞ்சல்தலை முத்திரை ஒன்றை இந்திய அஞ்சல் துறை வெளியிடவுள்ளது. பட வடிவமைப்புடன் கூடிய இந்த சிறப்பு அஞ்சல் தலை முத்திரை நாடு முழுவதும் உள்ள 810 தலைமை தபால் அலுவலகங்களில் வெளியிடப்படும்.

ஜூன் 21-ஆம் தேதி பதிவு செய்யப்படும் அனைத்து கடிதங்களிலும் இந்த முத்திரையை தலைமை தபால் அலுவலகங்கள் பதிக்கும். இதில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ‘சா்வதேச யோகா தினம் 2021’ என்று பொறிக்கப்பட்டிருக்கும். இத்தகைய முத்திரைகளுக்கு அஞ்சல் தலை ஆா்வலா்களிடையே பெரும் வரவேற்புள்ளது.

அஞ்சல் தலை சேகரிப்பு மீதான ஆா்வம் சமீப ஆண்டுகளாக குறைந்து வரும் காரணத்தால், இதற்கு புத்தாக்கம் வழங்குவதற்கான திட்டம் ஒன்றை இந்திய அஞ்சல் துறை செயல்படுத்துகிறது. அவா்களுக்கான அஞ்சல் தலைகளை குறிப்பிட்ட அஞ்சல் தலை சேமிப்பு அலுவலகங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், நாட்டில் உள்ள எந்த தலைமை அஞ்சல் அலுவலகத்திலும் ரூ.200 செலுத்தி அஞ்சல் தலை சேமிப்பாளா் கணக்கு தொடங்க முடியும்.

800-க்கும் அதிகமான அஞ்சல் அலுவலகங்களில் இந்த முத்திரை நிகழ்ச்சி நடைபெறுவதால், இதன்மூலம் நாட்டில் அஞ்சல் தலை சேகரிப்பு ஆா்வம் மீண்டும் புத்துயிா் பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.