வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கேரளத்தில் குழந்தை உள்பட மூவருக்கு 'டெல்டா பிளஸ்' கரோனா

கேரளத்தில் 4 வயது குழந்தை உள்பட மூவருக்கு டெல்டா பிளஸ் வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

News image
கேரளத்தில் குழந்தை உள்பட மூவருக்கு 'டெல்டா பிளஸ்' கரோனா
Updated On :22 ஜூன் 2021, 9:07 am

DIN

கேரளத்தில் 4 வயது குழந்தை உள்பட மூவருக்கு டெல்டா பிளஸ் வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

டெல்டா பிளஸ் வகை கரோனா கண்டறியப்பட்டுள்ள மாவட்டங்களில் பரவலைத் தடுக்கும் வகையில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்தியாவுக்கு வெளியே புதிதாக கண்டறியப்பட்டுள்ள ‘டெல்டா பிளஸ்’ என்ற மாறுபட்ட கரோனா, கவலையளிக்கக் கூடியதாக வகைப்படுத்தப்படவில்லை என்று நீதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.

எனினும் புதிய வகை கரோனா என்பதால், டெல்டா பிளஸ் கரோனவால் பாதிக்கப்பட்டவர்களை தனியாக வைத்து சுகாதாரத் துறை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

YouTube video thumbnail

கேரளத்தில் பத்தினம்திட்டா, பாலக்காடு ஆகிய இரு மாவட்டங்களில் ஒரு குழந்தை மற்றும் இரு பெண்களுக்கு டெல்டா பிளஸ் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அம்மாநில சுகாதாரத் துறை அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறது. பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் மேலும் பரவலைத் தடுக்கும் வகையில் பரிசோதனைகளை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.