2-ம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் 

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே மற்றும் அவரது மனைவி நீதா சவுபே ஆகியோர் இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசியை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்
2-ம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் 

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே மற்றும் அவரது மனைவி நீதா சௌபே ஆகியோர் இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசியை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று செலுத்திக்கொண்டனர். 
தொடர்ந்து அவர் கூறுகையில், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பு மருந்தே நமது பாதுகாப்பு கவசம். கரோனாவுக்கு எதிரான போரில் நமது பாதுகாப்பை அது பலப்படுத்துகிறது. பெருந்தொற்றில் இருந்து தங்களையும் தங்களது அன்புக்குரியவர்களையும் காக்க நமது நாட்டு மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். 
தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டாலும் சரியான கரோனா நடத்தைமுறைகளை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும். விதிகளை கடைப்பிடித்தல் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் ஆகியவை கரோனாவுக்கு எதிரான நமது மக்கள் இயக்கத்தின் முக்கிய தூண்களாகும். தடுப்பு மருந்து மற்றும் எச்சரிக்கை ஆகிய இரண்டுமே முக்கியம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com