பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த குழந்தைகளுக்கான மனநல மருத்துவர் ஒருவர், கரோனா பாதித்து குணமடைந்த நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக ஒரே நபருக்கு கருப்பு மற்றும் பச்சை பூஞ்சை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனாவிலிருந்து மீண்டு வரும் மருத்துவர் ஆர். கார்த்திகேயனுக்கு முகத்தின் வலது பக்கத்தில் கடுமையான வலி ஏற்பட்டது. தாங்க முடியாத தலைவலி, மூக்கில் நீர் ஒழுகுதுல் போன்றவை ஏற்பட்டு மைசூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது வழக்கமான கருப்பு பூஞ்சை பாதிப்பாக இருக்கவில்லை. இவருக்கு நடத்திய பரிசோதனையில், அவரது மூக்குப் பகுதியில் பச்சை நிறத்தில் பிரவுன் கலரும் கலந்து, உப்புத் துகள் போன்றவை உருவாகியிருந்தது. இதனை பரிசோதித்ததில் அது பச்சை பூஞ்சை என்று தெரிய வந்தது. பல்வேறு கட்ட பரிசோதனையில் அவருக்கு பூஞ்சை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவரது மூக்குப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து, பூஞ்சை பாதித்த பகுதிகள் அகற்றப்பட்டன. தொடர் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளதாக காது மூக்கு தொண்டை சிறப்பு நிபுணர் தெரிவித்துள்ளார்.
அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு நீரிழிவு இல்லை. அதன் பிறகு நீரிழிவு ஏற்பட்டுள்ளது. கரோனா சிகிச்சையின் போது ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது உரிய நேரத்தில் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டதால் நிலைமை மோசமாகியிருக்கும் இது கண் மற்றும் மூளையைப் பாதித்திருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்

அடடா! 1 மணி நேர மின் தடையை நாசூக்காக சொன்ன தொல். திருமாவளவன்!

அரசுப் பள்ளிகளில் நாள்தோறும் காயத்ரி மந்திரம் கட்டாயம்: சத்தீஸ்கர் அரசு உத்தரவு







