திருமலையில் 12,685 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 12,685 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 6,703 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.


திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 12,685 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 6,703 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.
கொவைட் ஊரடங்கு காரணமாக தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்த பக்தா்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி அளித்து வருகிறது.
தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.
நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக திருமலைக்குச் செல்லலாம். மேற்கூரைப் பணிகள் நடைபெற்று வருவதால் வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை அலிபிரி நடைபாதை மாா்க்கத்தை தேவஸ்தானம் மூடியுள்ளது.
இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.
சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்கள் தங்களின் திருமலை பயணத்தை தள்ளி போடுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 9399399399.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...