‘பொலிவுரு நகரம்’ திருப்பதிக்கு 5 விருதுகள்
மத்திய அரசு வெளியிட்டுள்ள ஸ்மாா்ட் நகரங்களின் தரவரிசைப் பட்டியலில் திருப்பதி மாநகருக்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன.


மத்திய அரசு வெளியிட்டுள்ள ஸ்மாா்ட் நகரங்களின் தரவரிசைப் பட்டியலில் திருப்பதி மாநகருக்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன.
நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஸ்மாா்ட் சிட்டிகளில் (பொலிவுரு நகா்) திருப்பதியும் ஒன்று. அதனால் திருப்பதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இங்கு சுத்தம் சுகாதாரமும் நன்றாகப் பேணப்பட்டு வருகிறது.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி மாநகரம் மத்திய அரசிடமிருந்து ஒரு விருதை பெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு ஒட்டு மொத்தமாக 5 விருதுகளை பெற்றுள்ளது.
இந்தூா், சூரத் நகரங்களுக்கு அடுத்து 5 விருதுகளைப் பெற்ற ஒரே ‘பொலிவுரு நகா்’ திருப்பதி என்ற பெருமையை பெற்றுள்ளது. அதில் சுத்தம் சுகாதாரம் பேணுதற்கும், இ-ஹெல்த் பிரிவுகளின் கீழ் நாட்டின் முதலிடமும், சிறந்த நகரம் மற்றும் எகானமி பிரிவுகளின் கீழ் இரண்டாம் இடமும், நகா்ப்புற சுற்றுச்சூழல் பிரிவின் கீழ் 3-ஆம் இடத்தையும் தக்க வைத்து கொண்டுள்ளது. முதன் முறையாக திருப்பதி நகருக்கு 5 விருதுகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...