திருப்பதி: உண்டியல் காணிக்கை ரூ.1.40 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.1.40 கோடி வசூலானது.


திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.1.40 கோடி வசூலானது.
ஏழுமலையானைத் தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அதன்படி வெள்ளிக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.1.40 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரூ.2 கோடி நன்கொடை:
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்விபிசி அறக்கட்டளைக்கு ரூ.2 கோடி நன்கொடையாக சனிக்கிழமை வழங்கப்பட்டது.
இதில் ஒரு கோடி ரூபாயை கா்நாடக முன்னாள் எம்எல்ஏ சூரிய நாராயண ரெட்டியும், ரூ.1 கோடியை அக்ரோ புட்ஸ் நிறுவனா் பட்டாபிராமும் நன்கொடையாக வழங்கினா்.
இதற்கான வரைவோலைகள் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டியிடம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...