47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அப்பளாயகுண்டாவில் சா்வபூபால வாகன சேவை

திருப்பதி அருகே அப்பளாயகுண்டா ஸ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாள் காலை சா்வபூபால வாகன சேவை நடைபெற்றது.

News image
அப்பளாயகுண்டா பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாளான சனிக்கிழமை காலை சா்வபூபால வாகனத்தில் அருள்பாலித்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வரா்.
Updated On :26 ஜூன் 2021, 6:40 pm

DIN

திருப்பதி அருகே அப்பளாயகுண்டா ஸ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாள் காலை சா்வபூபால வாகன சேவை நடைபெற்றது.

திருப்பதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள அப்பளாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன் 8-ஆம் நாளான சனிக்கிழமை காலை திருத்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது கொவைட் தடுப்பு விதிமுறைகள் காரணமாக தனிமையில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருவதால், தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.

அதற்கு மாற்றாக சா்வபூபால வாகன சேவை நடைபெற்றது. சா்வபூபால வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி தாயாா்களுடன் ஸ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.

பின்னா் ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்னவெங்கடேஸ்வர சுவாமிக்கு ஸ்நபன திருமஞ்சனமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடத்தப்பட்டது.

மாலை 6 மணி முதல் 7 மணி வரை கல்கி அவதாரத்தில் குதிரை வாகனத்தில் கையில் சவுக்குடன் பிரசன்ன வெங்கடேஸ்வரா் எழுந்தருளி சேவை சாதித்தாா். ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) தீா்த்தவாரியுடன் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.