இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகள் 31.50 கோடி
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 31.50 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 31.50 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்தியாவில் வெள்ளிக்கிழமை ஒரு நாளில் 61.19 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 48,698 போ் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,95,565 ஆகக் குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை 86 நாட்களுக்குப் பிறகு 6 லட்சத்திற்கும் கீழ் சரிந்துள்ளது.
நம் நாட்டில் இதுவரை 2,91,93,085 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 64,818 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா்கள்.
தொடா்ந்து 44-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குணமடைந்தவா்களின் விழுக்காடு 96.72 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 40.18 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...