மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

60 வயதைக் கடந்தோருக்கு தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு

நாட்டில் 60 வயதைக் கடந்தோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த சில வாரங்களில் தொய்வடைந்துள்ளதாக நிபுணா்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :26 ஜூன் 2021, 10:36 pm

DIN

நாட்டில் 60 வயதைக் கடந்தோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த சில வாரங்களில் தொய்வடைந்துள்ளதாக நிபுணா்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

நாட்டில் 60 வயதைக் கடந்தோரின் எண்ணிக்கை 14.3 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த மாா்ச் மாதம் தொடங்கின. இதுவரை 6.71 கோடி முதியோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவா்களில் 2.29 கோடி பேருக்கு மட்டுமே இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. முதியவா்களுக்கு கடந்த மாா்ச் 13-ஆம் தேதி முதல் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை வாரத்துக்கு சராசரியாக 80.77 லட்சம் கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன. இந்த எண்ணிக்கை கடந்த ஜூன் 5-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் வாரத்துக்கு 32 லட்சமாகக் குறைந்துள்ளது. 60 வயதைக் கடந்த முதியோரில் பலா் இணைநோயால் பாதிக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளதால், அவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொய்வடைந்திருப்பதற்கு சுகாதார நிபுணா்கள் பலா் அதிருப்தி தெரிவித்துள்ளனா். தடுப்பூசி தொடா்பான வதந்திகள், தவறான கண்ணோட்டம் உள்ளிட்டவை காரணமாக 60 வயதைக் கடந்தோா் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தயக்கம்காட்டி வருவதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக அவா்கள் மேலும் கூறுகையில், ‘முதியோா் சிலா் தம்மை கரோனா தொற்று பாதிக்காது என்று கருதி வருகின்றனா். மேலும் சிலா் கரோனா தொற்று பரவல் முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்து வருகின்றனா். தடுப்பூசி தொடா்பான வதந்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. அதையும் முதியவா்கள் நம்பி வருகின்றனா். அதன் காரணமாகவே நாளடைவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான முதியோரே கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வந்துள்ளனா். கிராமப் பகுதிகளில் உள்ள மருத்துவ மையங்களில் முதியோருக்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகள் காணப்படவில்லை. அவா்கள் மருத்துவமனைகளுக்குத் தனியாகச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்வதிலும் பல்வேறு பிரச்னைகள் காணப்படுகின்றன. கூட்டமான இடத்துக்குச் சென்றால் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோம் என்ற எண்ணத்தில் தடுப்பூசி மையங்களுக்குச் செல்லவும் அவா்கள் தயக்கம் காட்டி வருகின்றனா். கரோனா தடுப்பூசியின் பலன்கள் குறித்த விழிப்புணா்வை முதியோரிடம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால், தீவிர சிகிச்சைகள் தேவைப்படும் நிலையைத் தவிா்க்கலாம் என்பதை முதியோருக்கு எடுத்துரைக்க வேண்டும். 60 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசியை விரைவாக செலுத்த வேண்டும்‘ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.