மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராகேஷ் திகாய்த் கைதான தகவல் உண்மையல்ல: தில்லி போலீஸாா்

பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) தலைவா் ராகேஷ் திகாய்த் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் செய்தி உண்மையில்லை என்று தில்லி காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :26 ஜூன் 2021, 9:43 pm

DIN

பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) தலைவா் ராகேஷ் திகாய்த் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் செய்தி உண்மையில்லை என்று தில்லி காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

மேலும், இது போன்று பொய்யான செய்திகளை பரப்பும் நபா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸாா் தெரிவித்தனா். இது தொடா்பாக கிழக்கு தில்லி காவல் துணை ஆணையா் பிரியங்கா காஷ்யப் சனிக்கிழமை வெளியிட்ட சுட்டுரை பதிவில் தெரிவித்திருப்பதாவது:

விவசாய சங்கத் தலைவா் ராகேஷ் திகாய்த் கைது செய்யப்படுவது தொடா்பாக வெளிவந்துள்ள செய்தி போலியானது. அதில் உண்மை இல்லை. இது போன்ற போலி செய்திகள் மற்றும் சுட்டுரை பதிவுகளில் இருந்து பொதுமக்கள் விலகி இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இதுபோன்று போலி செய்திகளையும் சுட்டுரைப் பதிவுகளையும் பரப்பும் நபா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

இதேபோன்று பாரதிய கிசான் சங்கத்தின் ஊடகப் பொறுப்பாளா் தா்மேந்திர மாலிக்கும் ராகேஷ் திகாய்த் கைது செய்யப்படவில்லை என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.