கேரளத்தில் புதிதாக 13,658 பேருக்கு கரோனா தொற்று
கேரளத்தில் புதிதாக 13,658 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


கேரளத்தில் புதிதாக 13,658 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"கேரளத்தில் புதிதாக 13,658 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 9.7% சதவிகிதம். இதுவரை மொத்தம் 2.3 கோடிக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
கடந்த நாள்களில் 142 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 13,235 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் 11,808 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 28,09,587 பேர் குணமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...