புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தொகுதி மறுசீரமைப்பு: ஜம்மு-காஷ்மீர் செல்கிறது ஆணையம்

​அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் கலந்துரையாட தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் ஜூலை 6-9 இடையே ஜம்மு-காஷ்மீர் செல்லவுள்ளதாக தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்தது.

News image
கோப்புப்படம்
Updated On :30 ஜூன் 2021, 10:25 am

DIN


அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் கலந்துரையாட தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் ஜூலை 6-9 இடையே ஜம்மு-காஷ்மீர் செல்லவுள்ளதாக தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்தது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

"தொகுதி மறுசீரமைப்பு ஆணையத் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சன பிரகாஷ் தேசாய் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையிலான கூட்டத்துக்குப் பிறகு இதுதொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.

அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைத்து தங்களது மதிப்புமிக்க பரிந்துரைகளைத் தருவார்கள் என ஆணையம் எதிர்பார்க்கிறது. இதன்மூலம், மறுசீரமைப்புப் பணிகள் விரைவில் நிறைவடையும்."

கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.

இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் ஜம்மு-காஷ்மீரில் நாடாளுமன்ற மற்றும் பேரவைத் தொகுதிகளை மறுவரையறை செய்யவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.