தில்லியில் உணவு விநியோகிப்பாளர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்கள்: துணை முதல்வர்
தில்லியில் உணவு விநியோகிப்பாளர்களுக்கு 4 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.


தில்லியில் உணவு விநியோகிப்பாளர்களுக்கு 4 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மணீஷ் சிசோடியா வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
உணவு விநியோகிக்கும் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது மிகவும் முக்கியமானது. அவர்கள் நாள்தோறும் உணவுகள் மற்றும் பிற பொருள்களை மக்களுக்கு விநியோகம் செய்கிறார்கள்.
அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தில்லியில் 4 சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தில்லியில் இதுவரை 17 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 17 லட்சம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...