தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கரோனா தடுப்பூசியால் மலட்டுத் தன்மை ஏற்படாது: மத்திய அரசு விளக்கம்

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மலட்டுத் தன்மை ஏற்படும் என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரமில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

News image
Updated On :30 ஜூன் 2021, 1:12 pm

DIN


கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மலட்டுத் தன்மை ஏற்படும் என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரமில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆண், பெண் ஆகிய இருவருக்கும் மலட்டுத் தன்மை ஏற்படுவதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த விளக்கத்தை அரசு அளித்துள்ளது.

மேலும், கரோனா தடுப்பூசி இருபாலரிடையேயும் நல்ல பலனை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தடுப்பூசி நிர்வாக தேசிய நிபுணர் குழு, பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும், பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பாலூட்டுவதை நிறுத்த வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.

மலட்டுத் தன்மை விவகாரம் தொடர்பாக மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத் துறை தங்களது வலைதளத்தில் பதிலளித்து வருகிறது. இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் மலட்டுத் தன்மை ஏற்பட்டதாக ஒரு புகாரும் பதிவாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

தடுப்பூசிகள் முதலில் விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது. மனிதர்களிடையேயும் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகே சந்தையில் பொதுமக்களுக்கு விநியோகிக்க அரசு அனுமதி அளித்தது.

கரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் திறனை பரிசோதனை செய்த பிறகே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மலட்டுத் தன்மை ஏற்படுவதாக வதந்திகள் பரவுகின்றன. ஆனால் அதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

கரோனா நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவரும் மருத்துவருமான என்.கே.அரோரா கூறியதாவது, போலியோ தடுப்பு மருந்து போடும்போதும் இதுபோன்ற வதந்திகள் பரவின. போலியோ தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட குழந்தைகள் எதிர்காலத்தில் மலட்டுத் தன்மையை சந்திப்பார்கள் என்று வதந்தி பரவியது.

எந்தவொரு தடுப்பூசியும் பல கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகே மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. எதிலும் இதுபோன்ற மிகப்பெரிய பிரச்னைகளுக்கு காரணமான  பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.