வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மத்தியப் பிரதேச எம்.பி. கரோனாவால் பலி

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நந்த்குமார் சிங் செளகான் திங்கள்கிழமை காலமானார்.

News image

மத்தியப் பிரதேச எம்.பி. கரோனாவால் பலி

Updated On :2 மார்ச் 2021, 5:55 am

ANI

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நந்த்குமார் சிங் செளகான் திங்கள்கிழமை காலமானார்.

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நந்த்குமார் சிங் செளகான். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கரோனா தொற்று உறுதியானது.

இதனைத் தொடர்ந்து தில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட்டார். தீவிர பாதிப்புக்குள்ளான நந்த்குமார் சிங் செளகானுக்கு செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் திங்கள்கிழமை இரவு செளகான் பலியானார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.