மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

24 மணி நேரமும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி: ஹர்ஷ் வர்தன்

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 24 மணி நேரமும் செயல்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

News image

24 மணி நேரமும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி: ஹர்ஷ் வர்தன்

Updated On :3 மார்ச் 2021, 10:48 am


புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 24 மணி நேரமும் செயல்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் உடல் நலனே பிரதமர் நரேந்திர மோடிக்கு முக்கியம் என்று குறிப்பிட்டிருக்கும் ஹர்ஷ் வர்தன், இனி பொதுமக்கள் தங்கள் வசதிக்கேற்ப, எப்போது வேண்டுமானாலும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தும் வகையில், இதுவரை இருந்த நேரக் கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியுள்ளது. இனி நாடு முழுவதும் 24 மணி நேரமும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும்.

எனவே, பொதுமக்கள் எந்த நேரத்தில் தங்களால் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியுமோ, அப்போது சென்று ஊசி போட்டுக் கொள்ளலாம்.

தற்போது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், இந்த நேரக்கட்டுப்பாட்டை மருத்துவமனைகள் மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் நேற்று அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.