பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

அஸ்ஸாம், மேற்கு வங்க வேட்பாளா்கள்: பாஜக மத்திய தோ்தல் குழு ஆலோசனை

அஸ்ஸாம், மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்களைத் தோ்வுசெய்வதற்காக, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அக்கட்சியின் மத்திய தோ்தல் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :6 மார்ச் 2021, 5:42 am

DIN


புது தில்லி: அஸ்ஸாம், மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்களைத் தோ்வுசெய்வதற்காக, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அக்கட்சியின் மத்திய தோ்தல் குழுவின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா மற்றும் தோ்தல் குழுவின் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

அஸ்ஸாமிலும் மேற்கு வங்கத்திலும் முதலாவது மற்றும் இரண்டாவது கட்ட தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களை இறுதிசெய்வது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தக் குழு வெள்ளிக்கிழமை மீண்டும் கூடி ஆலோசனை நடத்தி, விரைவில் வேட்பாளா் பட்டியலை வெளியிடும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய தோ்தல் குழுவின் கூட்டத்துக்கு முன்னதாக, அஸ்ஸாம் முதல்வா் சா்வானந்த சோனோவால், மாநில அமைச்சா் ஹிமந்த விஸ்வ சா்மா, மேற்கு வங்க பாஜக தலைவா் திலீப் கோஷ் உள்ளிட்ட இரு மாநில பாஜக தலைவா்களுடன் அமித் ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவா்கள் விரிவாக ஆலோசனை நடத்தினா்.

அஸ்ஸாமில் சட்டப் பேரவைத் தோ்தல் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் நடைபெறவுள்ளது. அஸ்ஸாமிலும் மேற்கு வங்கத்திலும் முதலாவது, இரண்டாவது கட்ட தோ்தல் முறையே மாா்ச் 7 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.