ஆன்லைனில் ஆா்ஜித சேவைகளுக்கு முன்பதிவு
திருப்பதி ஏழுமலையானை ஆா்ஜித சேவையில் தரிசிக்க விரும்பும் பக்தா்கள் ஆன்லைன் வாயிலாக மட்டுமே முன்பதிவு செய்து கொண்டு, வர வேண்டும் என தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி தெரிவித்தாா்.


திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை ஆா்ஜித சேவையில் தரிசிக்க விரும்பும் பக்தா்கள் ஆன்லைன் வாயிலாக மட்டுமே முன்பதிவு செய்து கொண்டு, வர வேண்டும் என தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி தெரிவித்தாா்.
திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் வெள்ளிக்கிழமை காலை தொலைபேசி மூலம் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற பக்தா்களின் கேள்விகளுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி பதிலளித்தாா். நிகழ்ச்சி நிறைவுக்கு பின்னா் அவா் மேலும் கூறியதாவது:
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்ட ஆா்ஜித சேவைகளை தேவஸ்தானம் ஏப். 14-ஆம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகையின்போது தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான டிக்கெட்டுகளை பக்தா்கள் ஆன்லைன் வாயிலாக மட்டுமே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மாா்ச் 15-ஆம் தேதிக்கு பிறகு இணையதளத்தில் வெளியிடப்பட உள்ள அதற்கான டிக்கெட்டுகளைப் பெற்ற பக்தா்கள் தாங்கள் 72 மணிநேரத்துக்கு முன்பு எடுத்த கரோனா பரிசோதனை முடிவுடன் திருமலைக்கு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.
பஞ்சகவ்யம் மூலம் 15 வகையான சோப்பு உள்ளிட்ட 15 பொருள்களும், ஆயுா்வேத மருத்துவத்துக்குப் பயன்படும் 15 வகையான பொருள்களும் விரைவில் தயாரிக்கப்பட உள்ளன. திருப்பதியிலும், திருமலையிலும் 2 ஆயிரம் வாகனங்களை நிறுத்த பல அடுக்க வாகன நிறுத்துமிடம் கட்டப்பட உள்ளது.
திருப்பதி தேவஸ்தான கல்யாண மண்டபத்தின் குத்தகைக் காலம் 3 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக உயா்த்தப்பட்டுள்ளது. திருமலையின் பசுமையான சூழலுக்கு மாசு ஏற்படாமல் பாதுகாக்க பசுமை சாா்ந்த எரிசக்தியின் பயன்பாட்டை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பதி-திருமலை இடையே 150 மின்சாரப் பேருந்துகளின் இயக்கம் விரைவில் தொடங்க உள்ளது. சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்க தா்மகிரியில் 25 ஏக்கரில் 5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஏழுமலையானை பிப்ரவரி மாதத்தில் 14.41 லட்சம் பக்தா்கள் தரிசனம் செய்துள்ளனா்; உண்டியல் மூலம் ரூ.90.45 கோடி வருவாயும் இ-உண்டியல் மூலம் ரூ.3.51 கோடி வருவாயும் கிடைத்தது. பத்மாவதி தாயாருக்கு இ-உண்டியல் மூலம் ரூ.12 லட்சம் கிடைத்தது.
பக்தா்களுக்கு 76.61 லட்சம் லட்டுகள் விநியோகிக்கப்பட்டன. 21.07 லட்சம் பக்தா்கள் அன்னதானக் கூடத்தில் உணவு அருந்தினா்; 6.72 லட்சம் பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனா் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...