கோப்புப்படம்
கோப்புப்படம்

அதிகரிக்கும் கரோனா பரவல்: 4 மாநில பயணிகளுக்கு கட்டுப்பாடு விதித்த ராஜஸ்தான் அரசு

அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவல் காரணமாக 4 மாநில பயணிகள் கரோனா எதிர்மறை சான்றிதழை பெற்றிருப்பது கட்டாயம் என ராஜஸ்தான் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவல் காரணமாக 4 மாநில பயணிகள் கரோனா எதிர்மறை சான்றிதழை பெற்றிருப்பது கட்டாயம் என ராஜஸ்தான் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று கட்டுக்குள் இருந்தாலும் மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகரித்துவரும் காரோனா தொற்று காரணமாக புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி பஞ்சாப், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ராஜஸ்தானுக்கு வருபவர்கள் கரோனா பரிசோதனைக்கு எதிர்மறையான சான்றிதழை பெற்றிருப்பதை கட்டாயமாக்கியுள்ளது.

முன்னர் அறிவிக்கப்பட்ட மகாராஷ்டிரம் மற்றும் கேரளத்திலிருந்து வருபவர்களுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com