தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

‘மகாராஷ்டிர பயணிகளுக்கு கரோனா சான்றிதழ் அவசியம்’: ம.பி. அரசு

அதிகரிக்கும் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக மகாராஷ்டிரம் மாநிலத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

News image
‘மகாராஷ்டிர பயணிகளுக்கு கரோனா சான்றிதழ் அவசியம்’: ம.பி. அரசு
Updated On :6 மார்ச் 2021, 10:33 am

DIN

அதிகரிக்கும் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக மகாராஷ்டிரம் மாநிலத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று கட்டுக்குள் வந்தாலும் மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. 

இந்நிலையில் மகாராஷ்டிரத்திலிருந்து வரும் பயணிகள் கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிர்மறை சான்றிதழை வைத்திருப்பது கட்டாயமாக்கப்படுவதாக மத்தியப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

போபால், இந்தூர், ஜபல்பூர், பெத்துல், சிந்த்வாரா, உஜ்ஜைன் உள்ளிட்ட மாநில எல்லைப்பகுதிகளில் கரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.

மத்திய பிரதேச எல்லைப் பகுதிகளில் புதிய கரோனா தொற்று பதிவாகியுள்ளதன் அடிப்படையில் இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் மார்ச் 8 முதல் போபால் மற்றும் இந்தூரில் இரவு நேர பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 457 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.