
உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார். தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் அவர் வழங்கினார்.
உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்துக்கும் மாநில பாஜக தலைவா்கள் சிலருக்கும் இடையே கடந்த சில தினங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. அவரது தலைமையின் மீது மாநில பாஜக தலைவர்கள் அதிருப்தி அடைந்ததாக வெளியான தகவலின் மத்தியில் திங்கள்கிழமை தில்லியில் பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவா்களை திரிவேந்திர சிங் ராவத் சந்தித்தாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஆளுநர் ராணி மெளரியாவை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை திரிவேந்திர சிங் மெளரியா வழங்கினார்.
இந்த ஆண்டின் இறுதியில் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திரிவேந்திர சிங் ராவத் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே உத்தரகண்ட் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.