டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உத்தரகண்ட் மாநில பாஜக தலைவராக மதன் கௌசிக் நியமனம்

உத்தரகண்ட் மாநில பாஜக தலைவராக மதன் கௌசிக் நியமிக்கப்பட்டுள்ளார்.  

News image
Updated On :12 மார்ச் 2021, 11:20 am

DIN

உத்தரகண்ட் மாநில பாஜக தலைவராக மதன் கௌசிக் நியமிக்கப்பட்டுள்ளார். 
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், உத்தரகண்ட் மாநில பாஜக தலைவராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி கூறுகிறேன். 
2022-ல் உத்தரகண்ட் மாநிலத்தில் மீண்டும் பாஜக தலைமையிலான அரசு அமையும் என உறுதி கூறுகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
உத்தரகண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத், கட்சித் தலைமை கேட்டுக் கொண்டதன் பேரில் தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். 
அதைத்தொடர்ந்து உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். தற்போது அந்த வரிசையில் உத்தரகண்ட் மாநில பாஜகவின் தலைவரும் மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.