அதிகரிக்கும் கரோனா பரவல்: குஜராத்தில் 4 நகரங்களில் இரவு நேர பொதுமுடக்கம் அறிவிப்பு
அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் உள்ளிட்ட 4 நகரங்களில் இரவு நேர பொதுமுடக்கத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.


அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் உள்ளிட்ட 4 நகரங்களில் இரவு நேர பொதுமுடக்கத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டு வந்த பொதுமுடக்கத்தில் படிப்படியாக தளர்வு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இதையடுத்து, குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத். ராஜ்கோட், சூரத் மற்றும் வதோதரா ஆகிய பகுதிகளில் மார்ச் 17 முதல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுமுடக்கம் மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரத்தின் சில பகுதிகளில் இரவுநேரப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...