வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு தோல்வி: ப.சிதம்பரம்

நாட்டு மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

News image
ப.சிதம்பரம் (கோப்புப்படம்)
Updated On :18 மார்ச் 2021, 5:35 am

DIN

நாட்டு மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ''ஒவ்வொரு நாளும் கரோனா நோய்த்தொற்றின் விகிதம் அதிகரித்து வருகிறது. இது குறித்து யாரேனும் சிந்திக்கிறீர்களா?.

5.9 கோடி கரோனா தடுப்பூசிகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

ஆனால், இந்தியர்களுக்கு இதுவரை 3 கோடி கரோனா தடுப்பூசி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பதில் ஏமாற்றமடைகிறேன்.

தற்போதைய சூழலில் கரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசிக்கு மத்தியிலுள்ள போட்டியில் கரோனாதான் மக்களை வெல்கிறது.

மக்களுக்கு தேவைக்கேற்ப கரோனா தடுப்பூசிகளைப் போட வேண்டும். கரோனா தடுப்பூசிக்காக முன்பதிவு போன்ற அதிகாரத்துவ தடைகளை விலக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.