சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கரோனா பரவல்: ம.பி. பர்வானி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்

அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக மத்தியப் பிரதேச மாநிலத்தின் பர்வானி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :18 மார்ச் 2021, 2:00 pm

DIN

அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக மத்தியப் பிரதேச மாநிலத்தின் பர்வானி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டு வந்த பொதுமுடக்கத்தில் படிப்படியாக தளர்வு அளிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இதையடுத்து, மத்தியப் பிரதேசத்தின் பர்வானி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்திலிருந்து வருபவர்கள் 7 நாள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரத்தின் சில பகுதிகளில் இரவுநேரப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.