மும்பையில் இரவு நேரப் பொதுமுடக்கமா? மாநகர மேயர் விளக்கம்
அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக என மும்பை மாநகர மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்துள்ளார்.


அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக என மும்பை மாநகர மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நகரங்களில் இரவுநேரப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மும்பையில் இரவுநேரப் பொதுமுடக்கம் அமல்படுத்துவதற்கு அவசியம் ஏற்பட்டுள்ளதாக மாநகர மேயர் கிஷோரி பெட்னேகர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
“இரவு நேரப் பொதுமுடக்கம் விதிப்பது இப்போது அவசியம் என்று நினைக்கிறேன். நெரிசலான சந்தைகளை புதிய இடங்களுக்கு மாற்றுவது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். பொதுமுடக்கம் விதிக்கப்படுவதைத் தடுக்க மும்பைவாசிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என கிஷோரி பெட்னேகர் கேட்டுக்கொண்டார்.
மும்பையில் கடந்த 24 மணிநேரத்தில் 2377 பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...