சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மக்களவை உறுப்பினரான ராகுல்காந்தி அசாம் மாநிலத்தில் நாளை முதல் 2 நாள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
அசாமில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து வருகிறது. முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி நாளை அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். நாளை திப்ருகரின் லாகோலில் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள ராகுல்காந்தி அதனைத் தொடர்ந்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பேரணியில் பங்கேற்கிறார்.
அவரது தேர்தல் பிரசார திட்டத்தின்படி பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்கிறார். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அசாம் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கிறார்.
அசாமில் மார்ச் 27, ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 6 ஆகிய மூன்று கட்டங்களில் நடைபெறும் தேர்தலின் முடிவுகள் மே 2 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
போலி வாகன காப்பீடு வழங்கிய நெல்லை இளைஞா் கைது

தூத்துக்குடியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு

உச்சம் தொட்ட எலுமிச்சை விலை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


