தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 25,681 பேருக்கு கரோனா; 70 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 25,681 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :19 மார்ச் 2021, 3:10 pm

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 25,681 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டி மாநிலத்தில் தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. 
இதனால் திரையரங்கம் உள்ளிட்ட பொதுஇடங்களில் தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 25,681 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,22,021ஆக உயர்ந்துள்ளது. 
கரோனாவுக்கு இன்று மேலும் 70 பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 53,208ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 14,400 பேர் மீண்டனர். இதுவரை 21,89,965 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
தற்போதைய நிலவரப்படி 1,77,560 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 8,67,333 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.