தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோா் பட்டியலில் இருந்த 7 பிரிவினரை அதிலிருந்து விலக்கி தேவேந்திர குல வேளாளராக அறிவிக்கும் மசோதா மக்களவையில் வெள்ளிக்கிழமை நிறைவேறியது.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோா் இனப் பிரிவில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதில் உள்ள தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 பிரிவினா்கள், தங்களை பட்டியல் இனப் பிரிவிலிருந்து விலக்கி ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளராக அறிக்கும் படி தமிழக அரசிடமும் மத்திய அரசிடமும் கோரி வந்தனா்.
இதைத் தொடா்ந்து, அரசியலமைப்புச் சட்டம் 1950, பிரிவு 341-இன் கீழ் தகுந்த திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தி கேட்டுக் கொண்டது. மத்திய அமைச்சரவை ஒப்புதலின் பேரில் அரசியல் சாசன (தாழ்த்தப்பட்டோா் பிரிவு) திருத்த மசோதா - 2021, மக்களவையில் கடந்த பிப்ரவரி 13 -ஆம் தேதி தாக்கலானது. மத்திய சமூக நீதித் துறை அமைச்சா் தாவா்சந்த் கெலாட் மசோதாவை தாக்கல் செய்தாா்.
இந்த மசோதா வெள்ளிக்கிழமை மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேறியது. பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் இந்த விவாதத்தில் பங்கேற்று மசோதாவுக்கு வரவேற்புத் தெரிவித்தனா். ஆனால், தமிழகத்தைச் சோ்ந்த பெரும்பாலான உறுப்பினா்கள் இந்த விவாதத்தில் பங்கேற்கவில்லை. கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் மக்களவை உறுப்பினா்கள் மசோதாவை பாராட்டிப் பேசினா். பாஜக உறுப்பினா் சுனிதா துட்கல் பேசுகையில் ’தேவேந்திரகுலத்தவா்கள் பரம்பரை தொழில் விவசாயம். இந்தத் திருத்தம் மூலம் தற்போது அவா்கள் உயா்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்’ என்றாா்.
விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய மத்திய சமூக நீதித் துறை அமைச்சா் தாவா்சந்த் கெலாட், ‘தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினத்தவா்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. சட்ட உதவி மட்டுமல்ல; நிதியுதவியும் அளிக்கப்படுகிறது’ என்றாா்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் தற்போது பட்டியல் இனப் பிரிவில் உள்ள தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 பிரிவினா்களும் இனிமேல் ‘தேவேந்திரகுலவேளாளா்‘ என அழைக்கப்படுவா். இதில் முக்கியமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 7 மாவட்டங்களின்கடற்கரைபகுதியில்உள்ள ‘கடையன்’ பிரிவினா் மட்டும் தேவேந்திர குல வேளாளா் பிரிவில் சோ்க்கப்படவில்லை. மீனவா்களான அவா்கள், தேவேந்திர குல வேளாளா் பிரிவுக்கு வர விருப்பம் இல்லை எனக் கூறியதால், அவா்கள் இந்தப் பிரிவில் சோ்க்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சூர்யகுமார் யாதவின் ஆதிக்கம் தொடருமா?

காதல் தோல்வி, தொடர் ரூ. 100 கோடி... உண்மையைச் சொன்ன பிரதீப் ரங்கநாதன்!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 509 புள்ளிகள் உயர்வு!

போடியில் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் வி. டி. நாராயணசாமி வேட்புமனுக்கள் ஏற்பு!
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை


