ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)சிஜேபியின் சௌரவ் தாஸ், அஷுதோஷுக்கு 5 நாள்கள் நீதிமன்ற காவல்கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 14 பேர் பலி!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

காதல் தோல்வி, தொடர் ரூ. 100 கோடி... உண்மையைச் சொன்ன பிரதீப் ரங்கநாதன்!

மனம் திறந்த பிரதீப் ரங்கநாதன்...

pradeep ranganathan

பிரதீப் ரங்கநாதன் - file

Published On :

நடிகர் பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய காதல் தோல்வி குறித்து பேசியுள்ளார்.

லவ் டுடே மூலம் தமிழ் சினிமாவின் திறமையான இயக்குநர் நடிகராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இது ஏதோ அதிர்ஷ்டத்தில் அமைந்துவிட்டது என இதற்கான பேச்சுகளும் இருந்தன. ஆனால், அடுத்தடுத்து பிரதீப் நடித்த டிராகன் ரூ. 150 கோடியையும் டியூட் ரூ. 130 கோடியும் வசூலித்து நட்சத்திர நடிகர் என்கிற அடையாளம் பிரதீப்புக்கு கிடைத்தது.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஏகப்பட்ட ரசிகர்களை வைத்திருப்பதால் அதற்கான வணிகமும் விரிவடைந்துள்ளது. தற்போது, இவர் நடித்த எல்ஐகே திரைப்படம் வருகிற ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய பிரதீப் ரங்கநாதன், “எல்ஐகே திரைப்படம் ரூ. 100 கோடி வசூலித்தால் மகிழ்ச்சியடைவேன். ஆனால், இது அழுத்தத்தையும் தருகிறது. பலரும் என்னுடைய குறைந்தபட்ச வசூல் ரூ. 100 கோடி என்றே நினைக்கின்றனர். இதனால், என் படம் ரூ. 100 கோடியை வசூலிக்கவில்லை என்றால் அப்படம் வெற்றியடையவில்லை என்றே எடுத்துக்கொள்வார்கள். வசூலைவிட என் படங்களை விரும்புவதுதான் எனக்கு மகிழ்ச்சியைத் தரும்.” என்றார்.

மேலும், ”தற்போது காதலில் இருக்கிறீர்களா? இல்லையா?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு பிரதீப், “நான் சிங்கிள். இருந்தாலும், எனக்கு நிறைய காதல் தோல்விகள் இருந்திருக்கின்றன. நான் யாரையும் பிளாக் செய்ய மாட்டேன். ஆனால், பலர் என்னை பிளாக் செய்திருக்கிறார்கள்.” எனத் தெரிவித்தார்.

Summary

I prefer to say I’m single. I’ve gone through many break-ups said by actor pradeep ranganathan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.