கரோனா: இந்தியாவில் 4,20 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது
இந்தியாவில் இதுவரை 4 கோடியே 20 லட்சத்து 63 ஆயிரத்து 392 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் இதுவரை 4 கோடியே 20 லட்சத்து 63 ஆயிரத்து 392 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40,953 போ் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 188 பேர் உயிரிழந்துள்ளனர். இத்துடன் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,59,558 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் இதுவரை 4,20,63,392 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒர் நாளில் 27.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கரோனா முதல் யோஸ் 3,48 கோடி பேருக்கும், இரண்டாவது டோஸாக 72.21 லட்ம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அதேபோன்று மாா்ச் 19-ஆம் தேதி வரையிலும் மொத்தம் 23,24,31,517 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 10,60,971 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...