தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரேவிற்கு கரோனா தொற்று

மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரேவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :20 மார்ச் 2021, 1:17 pm

மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரேவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாடு முழுவதும் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப் மற்றும் தில்லி போன்ற மாநிலங்களில் தொற்று பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரேவிற்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் அவர், “கரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனையை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன். 

அனைவரும் கரோனா முன்னெச்சரிக்கை விதிகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.