காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராஜஸ்தானில் தானிய சேமிப்பு தொட்டியில் விழுந்த 5 குழந்தைகள் பலி

ராஜஸ்தானில் தானிய சேமிப்பு தொட்டியில் விழுந்த 5 குழந்தைகள் மூச்சுதிணறி பலியானார்கள். 

News image

கோப்புப்படம்.

Updated On :22 மார்ச் 2021, 7:02 am

DIN

ராஜஸ்தானில் தானிய சேமிப்பு தொட்டியில் விழுந்த 5 குழந்தைகள் மூச்சுதிணறி பலியானார்கள். 
ராஜஸ்தான் மாநிலம், பிகானேர் கிராமத்தில் வீடு ஒன்றில் இருந்த இரும்பினாலான தானிய சேமிப்பு தொட்டியை குழந்தைகள் சிலர் நேற்று பூட்டி விளையாடியுள்ளனர். அப்போது அவர்கள் அனைவரும் அந்த தொட்டியில் சிக்கிக்கொண்டனர். 
எவ்வளவு முயற்சித்தும் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. இந்த சம்பவத்தில் மூச்சுதிணறி 4 பெண் குழந்தைகள் உள்பட 5 குழந்தைகள் பலியானார்கள். வயலில் வேலை முடிந்த பிறகு வீடு திரும்பிய பெற்றோர் தங்களது குழந்தைகளை தேடியுள்ளனர். 
எங்கு தேடியும் கிடைக்காததால் இறுதியில் தானிய சேமிப்பு தொட்டியில் பார்த்தபோது அதில் குழந்தைகள் சிக்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.