நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

அயோத்தியில் பேருந்து விபத்து: 6 பேர் பலி 

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி சாலையில் பேருந்தும் டிரக்கும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 

News image

அயோத்தியில் பேருந்து விபத்து: 6 பேர் பலி 

Updated On :23 மார்ச் 2021, 6:18 am

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி சாலையில் பேருந்தும் டிரக்கும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 

ரௌஜா கிராமத்தின் ஓவர் பிரிட்ஜில் இரண்டு வழிச் சாலைகளில் ஒன்றன்பின்னால் ஒன்று பேருந்து சென்றுகொண்டிருந்தது. கான்பூரிலிருந்து பஸ்திக்கு இரண்டு பேருந்துகளும் சென்று கொண்டிருந்தன. அப்போது, ​எதிரே வந்த டிரக் பயங்கரமாக மோதியுள்ளது. 

இந்த விபத்தில் இரண்டு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் 4 பேர் சிகிச்சையின் போது மாவட்ட மருத்துவமனையில் பலியானதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்துள்ளார் மற்றும் காயமடைந்த பயணிகளுக்குச் சிகிச்சை மற்றும் உதவி வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இறந்தவரின் உறவினர்களுக்கு தலா ரூ .5 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.