வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கரோனா தடுப்பூசி செலுத்துவதை பரவலாக்க பஞ்சாப் முதல்வர் கோரிக்கை

புதிய வகை கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து 60 வயதுக்குட்பட்டவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த பஞ்சாப் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

News image
கரோனா தடுப்பூசி செலுத்துவதை பரவலாக்க பஞ்சாப் முதல்வர் கோரிக்கை
Updated On :23 மார்ச் 2021, 9:49 am

DIN

புதிய வகை கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து 60 வயதுக்குட்பட்டவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த பஞ்சாப் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பரவல் விகிதம் மீண்டும் உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்துவதை பரவலாக்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை பேசிய அவர், “நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு கரோனா தடுப்பூசி செலுத்துவதை அனைத்து தரப்பினருக்கும் பரவலாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். 

பஞ்சாபில் அதிகரிக்கும் கரோனா தொற்று பரவலை சுட்டிக்காட்டி பேசிய அமரீந்தர் சிங் மக்கள் கரோனா நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

பஞ்சாபில் திங்கள்கிழமை நிலவரப்படி 2299 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.