எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

'இப்படி பொய் பேசுபவரைப் பார்த்ததில்லை’: பிரதமர் மோடியை விமர்சித்த மம்தா

பிரதமர் மோடியைப் போல் பொய் பேசுபவரை இதுவரை பார்த்ததில்லை என மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

News image
இப்படி பொய் பேசுபவரைப் பார்த்ததில்லை’: பிரதமர் மோடியை விமர்சித்த மம்தா
Updated On :24 மார்ச் 2021, 11:00 am

DIN

பிரதமர் மோடியைப் போல் பொய் பேசுபவரை இதுவரை பார்த்ததில்லை என மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் பிஷ்ணுபூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய திரிணமூல் கட்சியின் தலைவரும், மேற்குவங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். 

பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடியை பொய்யர் என விமர்சித்த அவர், “நான் பிரதமர் பதவியை மிகவும் மதிக்கிறேன். ஆனால் பிரதமர் மோடியைப் போன்ற ஒரு பொய்யரை நான் பார்த்ததில்லை. இன்று, பாஜக சித்ரவதை காரணமாக, உ.பி.யில் காவல்துறை அதிகாரிகள் தங்கள் வேலையை விட்டு வெளியேறி வருகிறார்கள்" எனத் தெரிவித்தார்.

வங்காள கலாச்சாரத்தை அழிக்க பாஜக உத்தரபிரதேசத்திலிருந்து குண்டர்களை அழைத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

294 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் மார்ச் 27 தொடங்கி ஏப்ரல் 29 ஆம் தேதி வரை 8 கட்டங்களாக நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.