பிற மாநிலங்களிலிருந்து பெங்களூருக்கு வரும் மக்கள் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கர்நாடக சுகாதார அமைச்சர் கே.சுதாகர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
கேரளம், மகாராஷ்டிரம், பஞ்சாப், சண்டிகர் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனையைக் கட்டாயம் எடுக்க வேண்டும்.
20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான கரோனா தொற்று தற்போது பரவி வருகின்றன. இதில் எந்தொரு அலட்சியமும் இருக்கக்கூடாது. லேசான அறிகுறிகள் இருப்பினும் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
சந்தைகள், நெரிசலான சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், திரையரங்குகள், திருமண அரங்குகள், கல்லூரிகள் என நெரிசலான இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியே கடைப்பிடிப்பது கட்டாயம். நெரிசலான இடங்களில் கூடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது மாநிலத்தில் 15,614 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 9,45,594 பேர் நோய்த் தொற்றிலிருந்து மீட்டுள்ளனர். இதுவரை 12,449 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
பொறுப்பால் உயரும் பெருமை!

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


