நாக்பூர் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு சில மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு சில மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னதாக 600 படுக்கைகள் இருந்ததாகவும் தரைத்தளத்தில் வடிகால் பிரச்னை காரணமாக 90 படுக்கைகள் கொண்ட தரைத்தளம் மூடப்பட்டுள்ளதாகவும் மருத்துவமமனையின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
தற்போது மகாராஷ்டிரத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஒரு சில மருத்துவமனைகளில் இதுபோன்று படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நாக்பூர் மாவட்டத்தில் புதன்கிழமை 3,717 பேருக்கு புதிதாக தொற்று உறுதி ஆகியுள்ளது. கடந்த ஆண்டு முதல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக மாவட்டத்தில் கரோனா பாதிப்பு பதிவானது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் தற்போது 33,572 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாக்பூர் மாவட்ட நிர்வாகம் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்க விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...