ஆர்.எஸ்.எஸ். அமைப்பை இனி 'சங் பரிவார்' என அழைக்கமாட்டேன்: ராகுல் காந்தி
ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இனி 'சங் பரிவார்' என்று அழைக்கமாட்டேன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இனி 'சங் பரிவார்' என்று அழைக்கமாட்டேன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்து தேசியவாத கொள்கைகளைக் கொண்ட வலதுசாரி அமைப்பான ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் அமைப்புகளின் குடும்பங்களையே 'சங் பரிவார்' என்று கூறுவர்.
இந்நிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'சங் பரிவார் என்றால் அவர்களுக்கு குடும்பம் இருக்கும்; குடும்பத்தில் பெண்கள், முதியோர்கள் இருப்பார்கள்; அவர்கள் மதிக்கப்படுவார்கள். குடும்பம் எனில் அன்பு, இரக்கம் இருக்கும்.
ஆனால், ஆர்.எஸ்.எஸ்ஸில் அவ்வாறு இல்லை. எனவே, பெண்களை மதிக்காத ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இனி 'சங் பரிவார்' என்று அழைக்க மாட்டேன்' எனத் தாக்கியுள்ளார்.
முன்னதாக, கேரள கன்னியாஸ்திரிகள் உத்தரப்பிரதேசத்திலிருந்து ஒடிசாவின் புரி நகருக்குச் சென்ற ரயிலில் இருந்த பஜ்ரங் தள அமைப்பினர், கன்னியாஸ்திரிகள் மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாகக் கூறி அவர்களை துன்புறுத்தி ரயிலில் இருந்து பாதியில் இறக்கி விட்டனர். பின்னர் காவல்துறை விசாரித்ததில் கன்னியாஸ்திரிகள் மீது தவறு இல்லை என்பது உறுதியானது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியதும் குறிப்பிடத்தக்கது.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் இந்த சம்பவத்தை கண்டித்து, உத்தரபிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான கொடூரமான குற்றங்கள் நிறுத்தப்படுவதில்லை என்பது மிகுந்த கவலைக்குரியது என்று கூறினார்.
இந்நிலையில் ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தாக்கி இந்த கருத்தினை பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...