தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62,258 பேருக்கு தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,258 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :27 மார்ச் 2021, 5:25 am

DIN

புதுதில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,258 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 62,258  பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 19 லட்சத்து 8 ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் மேலும் கூறியிருப்பதாவது:

ஒரே நாளில் கொரோனாவால் 291 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 240 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 4 லட்சத்து 52 ஆயிரத்து 647 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், இதுவரை ஒரு கோடியே 12 லட்சத்து 64 ஆயிரத்து 637 பேர் குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

வெள்ளிக்கிழமை மாலை வரையிலும் 5 கோடியே 81 லட்சத்து 9 ஆயிரத்து 773 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) படி, மார்ச் 26 வரை 23,97,69,553 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன, அவற்றில் 11,64,915 சோதனைகள் நேற்று செய்யப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப், கர்நாடகம், குஜராத், தமிழ்நாடு, மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் தினசரி புதிய கரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும், மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரத்தில் 2,82,451 பேர் சிகிச்சையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.