தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பெங்களூரில் திடக்கழிவு மேலாண்மைக்கு தனி நிறுவனம்

பெங்களூரில் திடக்கழிவு மேலாண்மைக்கென தனி நிறுவனம் தொடங்கப்படும் என்று மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 மார்ச் 2021, 12:02 am

DIN

பெங்களூரில் திடக்கழிவு மேலாண்மைக்கென தனி நிறுவனம் தொடங்கப்படும் என்று மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: செலவினத்தில் அதிகப்பங்கை எடுத்துக்கொள்வது திடக்கழிவு மேலாண்மை.

நடப்பு நிதிநிலை அறிக்கையில், திடக்கழிவு மேலாண்மைக்காக மூலதன வேலைக்கான ரூ. 522 கோடியுடன் ரூ. 1,622.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிட்டால் இது அதிகமாக தோன்றும். ஆனால், இதுதான் உண்மையான செலவு. கடந்த 7 ஆண்டுகளில் முதல்முறையாக குப்பைகளைச் சேகரிக்கவும் எடுத்துச் செல்லவும் ஒப்பந்தப்புள்ளிகள் முடிவாகியுள்ளன. திடக்கழிவு மேலாண்மையை சீராகச் செயல்படுத்த தனி நிறுவனம் தொடங்கப்படும். அதைத் தொடங்குவதற்கு, ஆரம்ப கட்டத்தில் அந்த நிறுவனத்துக்கு மாநகராட்சியின் நிதி உதவி தேவைப்படும். குப்பைகள் இல்லாமல் தூய்மையைப் பராமரிக்க புதுமையான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தும் வாா்டுகளுக்கு ரூ. 50 லட்சம் பரிசு வழங்கப்படும். கழிப்பறைகள் மிகவும் முக்கியமானது. தரமான பொதுக் கழிப்பறைகள் 67 அமைக்கப்படும். இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தெருக்களைப் பெருக்கி தூய்மைப்படுத்தும் பணி மாநகராட்சியின் வசமே இருக்கும். இப்பணியில் ஈடுபட்டிருக்கும் துப்புரவுத் தொழிலாளா்களின் நலன் முக்கியம். இனிமேல் ஒவ்வொரு துப்புரவுத் தொழிலாளா்களுக்கும் மாதம் ரூ. 200 அளிக்கப்படும். இது ஆண்டுக்கு ரூ. 2,400 ஆக இருக்கும்.

இந்த நிதியில் துடைப்பம், கையுறைகள், காலணிகளை வாங்கிக் கொள்ளலாம். இனிமேல் இவற்றை மாநகராட்சி கொள்முதல் செய்யாது.

சமூக நீதியின் சின்னமாக விளங்கும் டாக்டா்.பி.ஆா். அம்பேத்கரின் பிறந்தநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்த நாளை மேலும் சிறப்பாக கொண்டாட துப்புரவுத்தொழிலாளா்கள் அனைவருக்கும் நேரடி வங்கிப் பரிமாற்றத்தின் மூலம் தலா ரூ. 5 ஆயிரம் அளிக்கப்படும்.

இதற்காக ரூ. 7.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தெருக்களை தூய்மைப்படுத்தும் பணி குறித்து மக்களின் கருத்தறியப்பட்டு அதன் தரம் மேம்படுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.