டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சண்டிகர்: கரோனா பரவலால் 25 பகுதிகளுக்குத் தடை

பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் கரோனா அதிகரித்து வருவதால், 25 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 7:53 pm

DIN

பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் கரோனா அதிகரித்து வருவதால், 25 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தொற்று அதிகமுள்ள மாநிலங்களுக்கு, மத்திய அரசு சுகாதாரக் குழுவினை அனுப்பிவைத்துள்ளது.

அவர்கள் மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தொற்று பரவும் விகிதத்திற்கேற்ப மாநில அரசுகள் தடை உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி தொற்று அதிகமுள்ள பகுதிகளைக் கண்டறிந்து, அவற்றை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.

அந்தவகையில் சண்டிகர் நகரில் 25 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களாக அம்மாவட்ட அரசு அறிவித்துள்ளது. அந்தப் பகுதிகளில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2,914 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,34,602-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.