தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பத்திரிகையாளர்களை கரோனா முன்களப் பணியாளர்களாக அறிவித்தார் மம்தா!

மாநிலத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களையும் கரோனா முன்களப் பணியாளர்களாக அறிவிப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 

News image

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

Updated On :3 மே 2021, 10:23 am

DIN

மாநிலத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களையும் கரோனா முன்களப் பணியாளர்களாக அறிவிப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 

முன்னதாக நேற்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பத்திரிகையாளர்களை கரோனா முன்களப் பணியாளர்களாக அறிவித்தார். 

கடந்த 2020 தொடக்கத்தில் கரோனா பரவத் தொடங்கிய காலத்திலிருந்து பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தங்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கரோனா ஊரடங்கு காலத்திலும் அவர்களது பணி இடைவிடாமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. 

இந்நிலையில் சுகாதாரப் பணியாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மட்டுமே கரோனா போர்வீரர்களாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஒடிசா முதல்வரைத் தொடர்ந்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி  பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்துள்ளார். 

மேலும், அனைவரும் அமைதியான முறையில் அதேநேரத்தில் கரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் மம்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213 தொகுதிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.