ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கரோனா: பாரத ஸ்டேட் வங்கி ரூ. 71 கோடி நிதியுதவி

கரோனா தடுப்புப் பணிக்காக பாரத ஸ்டேட் வங்கி ரூ.71 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :3 மே 2021, 9:40 am

DIN

கரோனா தடுப்புப் பணிக்காக பாரத ஸ்டேட் வங்கி ரூ.71 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. 

இந்தியாவில் கரோனா பரவல் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட மாநிலங்களில் கரோனா பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேலும், கரோனா தடுப்புப் பணிகளுக்கு பல அமைப்புகள், தன்னார்வலர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர். 

இந்நிலையில், கரோனா தடுப்புப் பணிக்காக பாரத ஸ்டேட் வங்கி ரூ.71 கோடி நிதியுதவியை இந்திய மக்களுக்காக வழங்குவதாக அறிவித்துள்ளது. 

மேலும் ரூ. 30 கோடி ரூபாய் மதிப்பிலான  1,000 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை, 250 ஐ.சி.யூ வசதி கொண்ட படுக்கைகள், தனிமைப்படுத்தும் வசதியுடன் கூடிய 1,000 படுக்கைகள் ஆகியவற்றை கரோனா பாதிப்பு மோசமாகவுள்ள மாநிலங்களுக்கு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.