தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

மத்திய அரசு தன் வேலையை சரியாகச் செய்திருந்தால் இது நடந்திருக்காது: ராகுல் ட்வீட்

மத்திய அரசு தனது வேலையை சரியாக செய்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

News image
ராகுல் காந்தி
Updated On :10 மே 2021, 7:25 am

DIN

மத்திய அரசு தனது வேலையை சரியாக செய்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

கரோனா இரண்டாம் அலை நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு முறையாக எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. 

இந்நிலையில் இன்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், வெளிநாடுகளில் இருந்து உதவியை பெற்றுக் கொண்டு மத்திய அரசு மார்தட்டிக் கொள்வது வேதனை அளிக்கிறது

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தனது வேலையைச் செய்திருந்தால் இது நடந்திருக்காது என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, கரோனா சிகிச்சையில் வெளிநாடுகளின் உதவியைப் பெறுவது குறித்த வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும் வெளிநாடுகளில் இருந்து பெற்ற உதவிகளின் விவரங்களை அளிக்குமாறும் ராகுல் காந்தி வலியுறுத்தியிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.