கார் வாங்குவதற்காக தங்களது 3 மாத ஆண் குழந்தையை பெற்றோர்களே ரூ.1.5 லட்சத்துக்கு விற்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கண்ணாஜில் பகுதியில் உள்ள திருவா கோட்வாலியில் வசித்து வரும் ஒரு தம்பதியினருக்கு 3 மாதமேயான ஆண் குழந்தை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தங்களது வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள தொழிலதிபர் ஒருவருக்கு ரூ.1.5 லட்சத்துக்கு தங்களது குழந்தையை அவர்கள் விற்றுள்ளனர்.
இந்நிலையில் தம்பதியினரின் வீட்டிற்கு வந்த குழந்தையின் தாத்தா இல்லத்தில் குழந்தை இல்லாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து குழந்தை விற்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர் திருவா கோட்வாலி காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
புகாரைப் பெற்றுக் கொண்ட காவலர்கள் குழந்தையின் பெற்றோரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றை வாங்குவதற்காக குழந்தையை ரூ.1.5 லட்சத்துக்கு விற்றது தெரியவந்தது.
இந்நிலையில் பெற்றோரை கைது செய்த காவல்துறையினர் இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் தொழிலதிபரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் தெரிவித்துள்ளனர்.
கார் வாங்குவதற்காக சொந்த குழந்தையையே பெற்றோர்கள் விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


